இந்திய-பாகிஸ்தான் அணிகள் மோதிய உலககிண்ண அரையிறுதியில் சூதாட்டம்
இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய உலக கிண்ண அரையிறுதி போட்டியில் சூதாட்டம் நடந்துள்ளதாக இங்கிலாந்து பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டது கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் டெய்லி மெயில் என்ற பத்திரிக்iயில், விளையாட்டு சூதாட்டங்கள் தொடர்பாக கட்டுரை எழுதும் ஹாவ்கின்ஸ் பேட்டி இடம்பெற்றிருந்தது.
அதில் இந்தியாவை சேர்ந்த சூதாட்ட தரகர் பார்த்திவ் என்பவர் தனக்கு ட்விட்டரில் ஒரு செய்தியை அனுப்பியதாகவும், அதில் இந்திய அணியின் துடுப்பாட்டம் அமையும் விதம் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாடும் போது 100 ஓட்டங்களுக்கு மேல் 2 விக்கெட்டும், 150 ஓட்டங்களை கடக்கும்போது 5 விக்கெட்டுகளும் விழும். 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைவார்கள் என்றும் பார்த்திவ் தெரிவித்திருந்ததாக கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment