பம்பலப்பிட்டியில் காரின் உள்ளே ஒருவர் கழுத்து வெட்டிக்கொலை
.
கொழும்பு பம்பலப்பிட்டி, மெராயன் டிரைவ் வீதியில் அநாதரவாக நின்ற கார் ஒன்றில் இருந்து கப்பல் நிறுவனமொன்றின் முகாமையாளரான ஆணொருவரின் சடலம் இன்று பிற்பகல் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.இச்சம்பவத்தில் நாராஹேன்பிட்டி, பொல்ஹேன்கொடயைச் சேர்ந்த 52 வயதான எம்.பி.விஜித டி சொய்ஸா என்றவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.விரிவுரை ஒன்றிற்றாக வீட்டிலிருந்து அவர் இன்று காலை புறப்பட்டுச் சென்ற நிலையிலேயே இவர் சடலமாக மீட்கப்பட்டள்ளார்.
குறித்த சடலத்தில் வெட்டுக்காயங்கள் இருந்ததாக பம்பலபிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர். அந்த சடலம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள இரண்டு பொலிஸ் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment