Tuesday, November 27, 2012

உளவாளி சிக்கிய போது கையில் இருந்த ‘ஜேம்ஸ் பாண்ட்’ ஸ்டைல் ஆயுதங்கள்!

தென் கொரிய ரயில்வே பிளாட்பாரத்தில் வைத்து கைது செய்யப்பட்ட வட கொரிய உளவாளி ஒருவரை சோதனையிட்டபோது, கிடைத்த பொருட்களை, இன்று Mokpo MBC டி.வி. சேனலில் காண்பித்தது தென்கொரிய உளவுத்துறை. ‘ஜேம்ஸ் பான்ட் ஸ்டைல் ஆயுதங்கள்’ என்ற என்ற வர்ணனையுடன் காண்பிக்கப்பட்ட பொருட்களில் ஒன்று ஒரு சிறிய டார்ச் லைட். (மேலேயுள்ள போட்டோ)

கருப்பு நிறத்தில் ஸ்ட்ராப்புடன் கூடிய, பாக்கெட்டில் வைத்துக்கொள்ளும் அளவிலான டார்ச் லைட் அது. ஒரு சைடில் போலீஸ் என்று எழுதப்பட்டுள்ளது. பார்த்தால், சாதாரண டார்ச் போலவுள்ள இதை நுணுக்கமாக பார்த்தால், அதன் ஒரு முனையில் 3 துவாரங்கள் உள்ளன. ஒவ்வொரு துவாரத்திலும் ஒரு மைக்ரோ புல்லட் உள்ளது.

தென்கொரிய ராணுவத்தின் ஆயுதப் பிரிவை சேர்ந்தவர்கள், இதுபோன்ற ஒரு ஆயுதத்தை இதற்குமுன் கண்டதே இல்லை என்கிறார்கள்.

இந்த துப்பாக்கி கம் டார்ச் லைட்டை இயக்கி பார்த்தபோது, அதிலுள்ள புல்லட் 16 அடி தூரத்துக்கு செல்லக்கூடியது என்பதும், ஒரு டபுள் மெத்தையை துளைத்துச் செல்லக்கூடியது என்பதும், தெரியவந்துள்ளது. க்ளோஸ் ரேஞ்சில் இருந்து ஒருவரை கொல்வதற்கு, அட்டகாசமான ஆயுதம் என்கிறார்கள், தென்கொரிய உளவுத் துறையினர்.

மற்றும் இரு பால்பாயின்ட் பேனாக்கள் இந்த உளவாளியிடம் இருந்து சிக்கின் அவற்றில் ஒன்றின் எழுதும் முனை, விஷம் தோய்க்கப்பட்ட, கூர்மையானது. ஒரு நபரின் உடலில் பேனாவின் முனையால் தொட்டாலே, தோலை குத்தி, அதிலுள்ள விஷத்தை உள்ளே அனுப்பிவிடும். மற்றைய பேனாவின் முனையில் ஒரு புல்லட் உள்ளது. டார்ச் லைட்டில் உள்ள அதே ரக புல்லட்!

கைது செய்யப்பட்ட நபரின் அடையாளத்தை வெளியிட மறுத்துள்ள தென்கொரிய உளவுத்துறை, அவரது பெயர் ‘அன்’ என்று மட்டும் கூறியுள்ளனர். சப்வே ரயில்வே ஸ்டேஷனில் கைது செய்யப்பட்ட இந்த ‘அன்’, ரயில் ஏறிப் போய், பார்க் சாங்-ஹக் என்பவரை சந்திக்க திட்டமிட்டிருந்தார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த பார்க் சாங்-ஹக், வட கொரியர். தற்போது அரசியல் அடைக்கலம் கோரி தென் கொரியாவில் வசிக்கிறார். வட கொரிய அரசுக்கு எதிரான பிரசாரங்களில் ஈடுபடும் நபர்!

.

No comments:

Post a Comment