எயிட்ஸ் நோயின் தாக்கம் வீழ்ச்சி ஜ.நா அறிக்கை தெரிவிப்பு
எச்.ஐ.வி தொற்று ஏற்படும் வீதத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதேவேளை இதற்கான சிகிச்சைகளின்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமான மக்கள் பயன் பெறுகின்றனர்' என ஐக்கிய நாடுகள் சபையின் எயிட்ஸ் நிறைவேற்றுப் பணிப்பாளர் சித்திப் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் எயிட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஏயிட்ஸ் தொற்று நோய் பரவுதல் வரலாறு காணாத அளவுக்கு குறைந்துள்ளது. புதிய எச்.ஐ.வி தொற்றுகள், குறைந்த மற்றும்; நடுத்தர வருமான நாடுகளில் 50 சதவீதத்தால் குறைந்திருக்கின்றது.
மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளிலேயே குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சையும் முன்னேற்றம் கண்டிருக்கிறது.
தொற்று ஏற்பட்டவர்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் வைரஸ் எதிர்ப்பு மாத்திரகளை பெறுகிறார்கள். மாலாவியில் 73 சதவீதத்தாலும் பொட்ஸுவாலாவில் 71 சதவீதத்தாலும் நமீபியாவில் 68 சதவீதத்தாலும் சம்பியாவில் 58 சதவீதத்தாலும் சிம்பாப்வேயில் 50 சதவீதத்தாலும் தென்னாபிரிக்கா மற்றும் சுவாஸிலாந்தில் 41 சதவீதத்தாலும் புதிய எயிட்ஸ் தொற்று குறைவடைந்துள்ளது.
கீழ் சகாரா ஆபிரிக்காவில் எயிட்ஸ் மரணங்கள் ஆறில் ஒரு பங்காக வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த நோய்க்கு சிகிச்சை பெறுவோரின் தொகை 59 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. தென்னாபிரிக்கா எயிட்ஸ் விடயத்தில் 1.6 பில்லியன் டொலரை உள்நாட்டு நிதியிலிருந்து செலவளித்துள்ளது.
சிறுவர்களில் எச்.ஐ.வி வைரஸ் தொற்றுவதைக் குறைப்பதில் ஆகவும் கூடுதல் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. எச்.ஐ.வி தொற்றுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிறுவர்களில் எச்.ஐ.வி தொற்றை பூரணமாக இல்லாதொழிப்பது சாத்தியம் என்பது இப்போது தெரிகின்றது' என ஐக்கிய நாடுகள் சபையின் தெரிவித்துள்ளது.
.
0 comments :
Post a Comment