உடல் சோர்வை நீக்கும் கொய்யாப்பழம்.
பழங்களில் மூக்கை துளைக்கும் வாசனை கொண்டதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த மருத்துவ குணம் உள்ள பழமாகவும் விளங்குகிறது கொய்யா.அனைவரும் வாங்கி உண்ணக் கூடிய வகையில் மலிவான விலையில் கிடைக்கக் கூடியது. கனிந்த கொய்யா பழத்துடன் மிளகு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு மற்றும் பித்தம் நீங்கும்.
கொய்யாவுடன் சப்போட்டா பழத்தை சேர்த்து தேன் கலந்து சாப்பிட்டால் உடல் வலு பெறுவதோடு ரத்தம் சுத்தமாகும். மதிய உணவுக்கு பின் கொய்யா பழம் சாப்பிட்டால் நன்றாக ஜீரணம் ஆவதோடு மலச்சிக்கல் நீங்கும். வயிற்று புண் குணமாகும்.
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சக்தியும் வயிற்றுப்போக்கு மூட்டுவழி அரிப்பு மூலநோய் சிறுநீரக கோளாறு உட்பட பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு.
0 comments :
Post a Comment