சாவகச்சேரியில் குண்டு வெடிப்பு இளைஞர் படுகாயம்
யாழ். தென்மராட்சியின் சரசாலையில் வெடிக்காத வெடிபொருள் ஒன்று வெடித்ததில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது. இதில் சரசாலை மேற்கைச் சேர்ந்த கே.எழில்கரன் வயது 21 என்ற இளைஞரே படுகாயமடைந்வராவார்.
இவர் தனது தோட்டத்தை துப்பரவு செய்யும் போது அதற்குள் இருந்த வெடிக்காத மர்ம வெடிபொருள் ஒன்று வெடித்ததில் முகத்தில் படுகாயமடைந்த நிலையில், சாவகச்சேரி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பல் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment