வெலிக்கடை சிறையிலுள்ள இந்தியக் கைதிகள் பாதுகாப்பாக உள்ளனர்.
வெலிக்கடையில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவத்தில் இந்தியக் கைதிகள் எவரும் பாதிக்கபடவில்லையென்றும் அவர்களது உயிருக்கு எந்தவிதமான ஆபத்தும் இதுவரையில் இல்லையென்றும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தா தெரிவித்துள்ளார்.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் இந்தியாவைச் சேர்ந்த 33 கைதிகளும் விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ள ஐந்துபேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் கலவரம் வெடித்ததிலிருந்து அங்குள்ள நிலைமை தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தொடர்ந்து அவதானித்துவருகின்றது.
இந்திய சிறைக்கைதிகள் பாதுகாப்பாக உள்ளதாக இலங்கை அரசாங்க அதிகாரிகள் இந்திய அரசிடம் தெரிவித்துள்ளதாகவும் துர்துவர் மேலும் கூறினார்..
0 comments :
Post a Comment