ஒரே நாளில் ஐந்த சடலங்கள் மீட்பு –பொலிஸார்
இலங்கையின் தென்பகுதியின் இரு வேறு பகுதிகளில் இருந்து ஜந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இச்சடலங்கள் இன்று செவ்வாய்க் கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.கிரியெல்ல முதுன்கொடுவப் பகுதியில் எரிவடைந்த வீடு ஒன்றிலிருந்து இரு சடலங்களும்
புளத்சிங்கள பகுதியிலிருந்து இனந்தெரியாத 3 சடலங்களுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
எரிவடைந்த வீட்டிலிருந்து 32 வயதான தாயினதும் அவரது 7 வயதான மகனினதும் சடலங்களே கிரியெல்ல பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இதேவேளைஇ புளத்சிங்கள உடஹேவத்த ஹல்வந்துர என்னும் இடத்திலிருந்து மீட்கப்பட்ட 3 சடலங்களும் இன்னமும் அடையாளங்காணப்படவில்லை
இவை தொடர்பான விசாரணைகளை அந்ததந்தப் பிரதேசங்களுக்குப் பொறுப்பான பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்..
0 comments :
Post a Comment