தமிழகத்துக்கு இலங்கை அகதி குழு
நீண்ட காலத்துக்கு பின்னர் இலங்கையில் இருந்து ஒரு தொகுதி தமிழர்கள் மீண்டும் தமிழகத்துக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.
20 பெண்கள் மற்றும் 28 சிறார்கள் உள்ளடங்களாக 69 இலங்கையர்கள் இவ்வாறு தமிழகம், ராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள முகுந்தராயர் சத்திரம் பகுதியை சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
த ஹிந்து பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
மன்னாரைச் சேர்ந்த குறித்த அகதிகள் புகலிடம் கோரிய நிலையில், தனுஸ்கோடியை அடைந்ததுடன், காவல்துறையினருக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நேற்று மண்டபம் முகாமிலிருந்து 135 அகதிகள் வரை திருச்சி மற்றும் விழுப்புரம் முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதன்படி, விழுப்புரத்தில் உள்ள சின்ன சேலம் முகாமுக்கு 60 பேரும் திருச்சி மாவட்டத்தில் உள்ள வாழவந்தான் கோட்டை முகாமுக்கு 75 பேருமாக மாற்றியனுப்பப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கரூர் அருகேயுள்ள ராயனூர் அகதிகள் முகாமில் வசித்து வந்த ஜெயபிரகாஷ் என்பரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிற.
நிதி கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலினாலேயே அவர் கொலை செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவிக்கப்படுகிறது.
மோதலின் போது கொலை செய்யப்பட்டவரை காப்பாற்ற முற்பட்ட அவரது சகோதரரும் படுகாமயடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அதேமுகாமைத் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், மதுரை அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் கவனிப்பாரற்ற நிலையில் அங்கு தங்கியுள்ளதாக த ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவிற்கு புகலிடம் கோரிச் சென்றவர்கள் அடிப்படை தேவைகளையேனும் பூர்த்தி செய்துக் கொள்ள கூடிய நிலையில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1983 ம் ஆண்டு ஜூலை இனக்கலவரங்களை அடுத்து அதிகளவான இலங்கைத் தமிழர்கள் தமிழகத்திற்கு புகலிடம் கோரி சென்றிருந்தனர்.
இவ்வாறு சென்றவர்கள் தமிழகத்தின் 103 முகாம்களில் தொடர்ந்தும் தங்கியுள்ளனர்.
அகதி முகாம்களில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு தமிழக மாநில அரசாங்கம் உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும், அகதி முகாம்களில் வாழ்வோருக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தி வருவதாகவும், அவர்களின் நலன் குறித்து அசமந்த போக்கை கடைபிடித்து வருவதாகவும் த ஹிந்து நாளிதழ் குற்றம் சுமத்தியுள்ளது.
மழை காலங்களில் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
1 comments :
This could be a well planned drama for political reasons sponsored by
some polticians.
Post a Comment