Friday, November 16, 2012

பாகிஸ்தானில் சில தலிபான்கள் விடுதலை!

புதன்கிழமை பாகிஸ்தான் சிறையிலிருந்து குறிப்பிட்டளவு தலிபான் கைதிகளை விடுதலை செய்திருப்பதாக பாகிஸ்தான் வெளிநாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கான காரணம் ஆப்கானுடன் சமாதானம் மற்றும் சமரச உறவை மேம்படுத்துதல் என அது தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் அரச அதிகாரிகளுக்கும் ஆப்கானில் சமாதானத்தை நிறுவுவதற்கான உயர் மட்ட குழுவினருக்கும் இடையே இஸ்லாமாபாத்தில் 3 நாள் சந்திப்பு இடம்பெற்றது. இதன் நோக்கம் அமைதியை ஏற்படுத்துவதற்காக தலிபான்களுடன் கூடிக் கலந்து பேசுவதாகும். இதனை அடுத்து ஆப்கான் அரசு பாகிஸ்தானில் இருந்து குறிப்பிட்டளவு தலிபான் கைதிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தது.

இக்கோரிக்கை மற்றும் கூட்டத்தில் எடுக்கப் பட்ட தீர்மானம் என்பவற்றுக்கு அமைவாக பாகிஸ்தானில் இருந்து கைதிகளை விடுவிப்பதென அரசால் முடிவு எடுக்கப் பட்டது. மேலும் விடுவிக்கப் படும் கைதிகளிடம், இவ்விரு தரப்பும் அல்கொய்தா உட்பட சர்வதேச ரீதியில் அச்சுறுத்தல் விளைவிக்கும் தீவிரவாத அமைப்புக்களுடன் உள்ள தொடர்பை அறுத்துக் கொள்ளுமாறு பணித்துள்ளன.

இதேவேளை இக்கைதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் இடத்துக்கு இவர்களை வரவழைப்பதற்குத் தகுந்த பாதுகாப்பை வழங்குவோம் என அமெரிக்காவும் ஆப்கானும் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே 2011 செப்டெம்பரில் இதைப் போன்று தலிபான்களுடன் முன்னெடுக்கப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தை மூத்த ஆப்கான் சமாதானத் தூதுவரும் முன்னால் அதிபருமான 'ரப்பானி' தற்கொலைக் குண்டுத் தாக்குதலால் பலியாகியதால் தடைப் பட்டிருந்தது.
தற்போது மீளத் தொடங்கவுள்ள இந்த பேச்சுவார்த்தையும் அவரது மகனான சலஹுடின் ரப்பானியால் முன்னெடுக்கப் படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com