Wednesday, November 7, 2012

தமிழ் அரசியல் தலைமைகளின் ஏமாற்று வித்தையின் அடுத்த சர்க்கஸ் தேசத்தின் குரல்

புலிகளுக்கு அரசியல் ஆலோசகராக இருந்தவர் அன்ரன் பாலசிங்கம். ஒருகட்டத்தில் அன்ரன் பாலசிங்கத்தை ஓரம்கட்டியிருந்த புலிகள் , அவரின் மரணத்தின் பின்னர் தங்களின் பிணத்தை வைத்து பணம் தேடும் செயற்பாட்டுக்காக அவருக்கு தேசத்தின்குரல் எனும் பெயரை வழங்கி அவரது உருவப்படத்தினை வன்னியெங்கும் படம்காட்டி சிறார்களை புலிப்படைக்கு பிடித்தெடுத்தது ஒரு அத்தியாயம்.

தமிழ் மக்கள் தொடர்சியாக ஏமாற்றப்படுவது கோழியிலிருந்து முட்டை வந்ததா ? முட்டையிலிருந்து கோழி வந்தா ? என்ற விடைகாணப்படாத கேள்வியே? இளைஞர்களின் விடுதலைப்போராட்டம் ஆரம்பமானபோது தமிழ் மக்களை ஆரம்பம் முதல் இது வரையில் ஏமாற்றியே வந்திருக்கும் தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளின் செயற்பாட்டிற்கு இளைஞர்களாலேயே முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்ற அதீத எதிர்பார்ப்பிலும் மக்கள் முழு ஆதரவு வழங்கினர். ஆனால் அப்போராட்டம் வேலி பயிரை மேய்ந்த கதையானது வேறுகதை.

இந்நிலையில் அடுத்த அத்தியாயம் நேற்று பெய்த மழைக்கு வெளிந்த தேரைச்குட்டியான சிறிதரனால் தொடங்கப்பட்டுள்ளது. அதாவது புலிகளின் தேசத்தின்குரலின் பெயரில் வன்னி மக்களுக்கு இலவசப் பத்திரிகை (நச்சுப்பத்திரிகை) கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

வன்னியிலே மக்கள் பட்ட கஷ்டங்களிலிருந்து மீள்வதற்கு வழிதேடுகின்றபோது, நடந்து முடிந்தவற்றை ஒரு கனவாக மறக்க நினைக்கின்றபோது, எஞ்சியிருக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி யோகிக்கின்றபோது சிறிதரனால் இலவசமான வழங்கப்படும்

தேசத்தின் குரல் என்ற நச்சுப்பத்திரிகை மக்களுக்கு என்ன நன்மை செய்யப் போகின்றது? அல்லது இதற்கு செலவிடப்படும் பணம் மக்களின் அன்றாட தேவைக்கு பயன்படுத்தப்பட்டாலென்ன என்ற கேளிவிகள் எழுப்பப்படுகின்றன. இப்பத்திரிகைக்கு செலவிடும் பணத்தினை மாதாந்தம் வறுமையின் நிமிர்த்தம் தமது கல்வியைத்தொடர முடியாமல் திணறும் 100 மாணவர்களுக்கு வழங்கினால் இச்சமூகம் மீண்டும் ஒரு வலுவான சமூகமாக உருப்பெற அது உதவாதா?

எது எவ்வாறாயினும் இந்தப்பத்திரிகையினை மக்கள் தமக்கு இடையூறாகவே பார்க்க ஆரம்பித்திருக்கின்றனர் என்பது அதனை அவர்கள் எவ்வடிவத்தில் வெளிகாட்டப்போகின்றார்கள் என்பதனையும் காணப்போகும் நாள் வெகுவிரைவில் இல்லை.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்லை இலக்கு வைத்து இப்பத்திரிகை வெளியிடப்படுகின்றது. இதற்காக ஏன்ஜிஓ க்களிடம் ஏராளமான பணம் பெறப்படுகின்றது என்றும் அதனை சிறிதரனே சுருட்டிக்கொள்வதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் உள்வீட்டு புகைச்சல்களும் உள்ளது.

இவற்றுக்கும் அப்பால் இப்பத்திரிகையினால் மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கப்பபோகின்றது. ஏன் வன்னியிலே வாழுகின்ற மக்கள் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புளித்த புராணத்தை கேட்ச தயாராக இருக்கின்றார்களா? ஆம் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குத்தான் வாக்களிக்கின்றார்கள். அதற்கு பொருள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்று அர்த்தம் அல்ல, மாறாக மாற்று தலைமை ஒன்றினை உருவாக்கவேண்டிய தமிழ் தலைமைகள் தொடர்ந்தும் விட்டுவரும் தவறுகள் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை நாடிச்செல்ல வைக்கின்றது. இன்றும் இத்தலைமைகள் தமது அணுகு முறைகளை மாற்றுவார்களாயின் மக்கள் இவ்வாறான நஞ்சுப்பத்திரிகைகளை கொழுத்தி சிறிதரன் போன்ற கன்றுக்குட்டிகளின் வெள்ளைவேட்டியை உயர்த்தி கோவணத்தினுள் வைப்பார்கள் என்பது நிச்சயம்.

1 comments :

Anonymous ,  November 8, 2012 at 11:23 AM  

Tamils must be alert and come out from the dark ages.The same old propaganda songs
repeateadly said by the Ex-FP present TULF and some medias cannot bring even a mustard size of benefit
for us.We should know to judge the
bogus journals,medias and politicians who lead us to find shelter in devils caves

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com