உடல் எடையைக் குறைக்க உதவும் நீச்சல் பயிற்சி
நீச்சல் பயிற்சியாலும் உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கின்றன. நீச்சல், முதியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லா வயதினருக்கும் ஏற்ற உடற்பயிற்சியாகும். உடல் ஊனமுற்றவர்களுக்குக்கூட இது மிகச்சிறந்த உடற்பயிற்சி. உடலை வலுவாக்கவும், கிடைத்த வலுவைப் பாதுகாத்துக்கொள்ளவும் உதவுகிறது. நீச்சல் பயிற்சி, உடலில் உள்ள பலவகையான உள் உறுப்புகளுக்கும் நரம்பு அமைப்புகளுக்கும் வலுவை அளிக்கிறது.
குறைந்த காலத்தில் உடலில் உள்ள பலவகையான தசைகளுக்கு நல்ல வலுவை அளிக்கிறது. உடலின் தேவையற்ற, அதிகமான எடையைக் குறைக்க துணை புரிகிறது. நீச்சல் பயிற்சியின்போது நீர் உடலுக்கு இயற்கையின் தடுப்பாற்றலை அளிக்கிறது.
தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் தொடர்ந்து நீச்சல் பயிற்சி மேற்கொள்வதால் தேவையற்ற கலோரிகளை எரிக்க முடியும். நீச்சலானது உள்ளத்துக்கு எளிதில் உணர்ச்சிவசப்படாத மனப்பக்குவத்தையும், எந்தச் செயலையும் நிதானத்துடன் செய்யும் மனப்பக்குவத்தையும் அளிக்கிறது.
0 comments :
Post a Comment