பருவ மழையினால் டெங்கு பரவும் அபாயம் அதிகரிப்பு சுகாதார அமைச்சு தெரிவிப்பு
நாட்டில் பெய்யும் பருவ பெயர்ச்சி மழை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் மேலும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
டெங்கு பரவும் அபாயம் அதிகரித்துள்ளமையால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பணிப்பாளர் டாக்டர் பபா பலிஹவடன அறிவுறுத்தியுள்ளார்.
மழை நீர் தேங்கி நிற்கும் இடங்களில் டெங்கு நுளம்புகள் பெருகுவதால் இத்தகைய இடங்களை அப்புறப்படுத்துமாறும் சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறும் சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
இதேவேளை கடந்த இரண்டு நாட்களில் ஏழுபேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment