Thursday, November 22, 2012

போதையில் கொலை வெறி.. ஒருவர் ஸ்தலத்திலேயே பலி.. மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு நகரில் உள்ள மதுபானசாலைக்குள் இருவருக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று இரவு 8.30மணியளவில் வாவிக்கரை வீதியில் உள்ள மதுபானசாலைக்குள் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மட்டக்களப்பு பொதுச்சந்தை பகுதியில் கூலித்தொழில் செய்துவரும் ஆதம்லெப்பை முகமட் முஸ்தபா(48வயது )என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.

மதுபானசாலையில் மது அருந்திக்கொண்டிருந்தபோது இருவருக்கு இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தின்போது குறித்த நபர் கடுமையாக தாக்கப்பட்டு போதலினால் குத்தப்பட்டுள்ள நிலையில் மதுபானசாலைக்கு அருகில் இருந்து பொதுமக்களால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டார்.

எனினும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை சம்பவ இடத்துக்கு வந்த மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சம்பவம் தொடர்புடைய நபரை தேடிவருவதாக தெரிவித்தனர்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com