ஜேர்மனியின் கார் பந்தய வீரர் செபஸ்டியன் வெட்டல் புதிய சாதனை
ஜேர்மனியின் கார் பந்தய வீரர் செபஸ்டியன் வெட்டல், தொடர்ந்து மூன்று ஃபோர்முலா வன் சாம்பியன் பட்டங்கள் வெற்றி பெற்ற முதல் இளவயது போட்டியாளர் எனும் புதிய பெருமையை பெற்றுள்ளார்.
பிரேசிலில் நடைபெற்று முடிந்த இவ்வருடத்திற்கான கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகளின் இறுதி சுற்று போட்டியில் பெற்ற புள்ளிகளின் அடிபப்டையில் அவர் சாம்பியனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அப்போட்டிகளில் அவர் 6வது இடத்தையே பெற்றார்.
எனினும் தேவையான புள்ளிகளை பெற்றதன் மூலம் வெட்டல் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் 25 வயது தொடர்ந்து மூன்று F1 ஃபோர்முலா சாம்பியன் பட்டம் வென்றவர் எனும் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஃபெராரி வீரர் பெர்ணாண்டோ அலொன்சோ வெட்டலுக்கு சவாலாக விளங்கினார். அவரும் ஏற்கனவே தொடர்ந்து இரு F1 சாம்பியன்ஷிப் பட்டம் வென்றிருந்தார். எனினும் இம்முறை போட்டிகளில் அவர் இரண்டாவது இடத்தை பெற்றார்.
எனினும் மொத்த சுற்றுக்களில் அவர் வென்ற விகிதத்தை வைத்து பார்க்கும் போது 3 புள்ளிகள் வித்தியாசத்தில் வெட்டெலிடம் சாம்பியன் பட்டத்தை இழந்தார்.
F1 போட்டிகளின் மிகச்சிறந்த சாதனை வீரராக எப்போதும் கருதப்படும் மைக்கெல் ஷூமாக்கர் இம்முறை 7வது இடத்தையே பெறமுடிந்தது. கடந்த மார்ச் 18ம் திகதி தொடங்கிய போட்டிகள் ஆஸ்திரேலியாவில் தொடங்கி மலேசியா, சீனா, இந்தியா உட்பட 19 நாடுகளில் நடைபெற்று பிரேசிலில் இறுதி சுற்று நடைபெற்றது.
0 comments :
Post a Comment