வெலிக்கடை சம்பவம் தொடர்பில் விசாரிக்க குழு – அமைச்சர் கஜதீர
வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகளுடன் இடம் பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார். வெலிக்கடையில் சிறைக்கiதிகளுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ள நிலையில் இச்சம்பவங்கள் தொடர்பாகவும் சிறையில் மோதல் ஏற்பட்டது தொடர்பாகவும் விசாரணை செய்ய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் வெலிக்கடை சம்பவம் தொடர்பில் பாராளுமன்றிலும் அறிக்கையென்றும் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment