Sunday, November 25, 2012

புலம்பெயர்ந்தோரின் பணத்துக்காகவே நீங்கள் அரசியல் செய்கின்றீர்கள்! த.தே.கூ மீது பாயும் கருணா.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் புலம்பெயர்ந்தோரின் பணத்திற்காகவே அரசியல் செய்வதாக கருணா எனப்படுகின்ற முரளிதரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பை சாடியுள்ளார். பாராளுமன்றில் நேற்று முன்தின் பேசும்போது மேற்கண்டவாறு கூறிய அவர் 13வது திருத்தச் சட்டத்தை தூக்கியெறிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று 13வது திருத்தம் பற்றி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பேசுவதாக குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கில் இன்று பாரிய அபிவிருத்தி நடைபெறுகிறது. உங்களை விட வடக்கு கிழக்கு பகுதிக்கு அதிகம் விஜயம் செய்தவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திகழ்கிறார். நீங்கள் கொழும்பில் இருப்பதால் அங்கு நடப்பது ஒன்றும் தெரியாது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை பற்றி பேசுகிறீர்கள். அதனை கொண்டுவந்தது ஐக்கிய தேசியக் கட்சி எனவே அது பற்றி அக்கட்சியிடம் கேளுங்கள். உங்களுக்கு வரலாறு தெரியாது.

1987ல் 13வது திருத்தத்தை தூக்கி வீசிய நீங்கள் இன்று உள்நாட்டில், வெளிநாட்டில் புலம்பெயர் தமிழர்களிடம் 13வது திருத்தம் பற்றி பேசுகிறீர்கள். நுpங்கள் இவ்வாறு பேசுவது புலம்பெயர் தமிழரிடம் பணம் கறப்பதற்காகவே. ஊங்களுக்கு பணம் வேண்டுமாக இருந்தால் அப்பணத்தினை வேறு வழியில் பெற்றுக்கொள்ளுங்கள். ஆனால் புலம்பெயர் தமிழர்களை தவறான வழிக்கு இட்டுச் செல்ல வேண்டாம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புலம்பெயர் தமிழர்களை ஒருபோதும் வெறுக்கவில்லை. அவர் எப்போதும் அவர்களுக்கு இணைந்து செயற்பட அழைப்பு விடுக்கிறார்.

தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கவே பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் மீது விருப்பம் கொண்டவர்கள் என்றால் அதில் கலந்து கொண்டு மக்களின் பிரச்சினை பற்றி பேசுங்கள்.

இந்த நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம் என பல இன மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டி மீண்டும் நாட்டில் யுத்தம் ஒன்றை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பைப் பார்த்து முரளிதரன் கருத்து வெளியிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com