புதிய வைத்தியசாலைக் கட்டிடத் தொகுதி ஜனாதிபதியால் திறப்பு
.
தங்கல்ல தள வைத்தியசாலையில் 180 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வைத்திய சிகிச்சை கட்டிடத் தொகுதி நிலையத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று திறந்துவைத்துள்ளார். சகலருக்கும் சுகாதார வசதி என்ற மஹிந்த சிந்தனைக்கு அமைவாகவே இவ் அபிவிருத்தி திட்டம் மேற் கொள்ளப்பட்டுள்ளதாகநிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்தார்.இது தொடர்பில் நடைபெற்ற வைபவத்தில் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ- சுகாதரா அமைச்சர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment