Tuesday, November 13, 2012

அடுத்த வருடம் முதல் ஒரு மணித்தியாலத்தில் இறப்பு. பிறப்பு.விவாக சான்றிதழ்கள்

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல பிரதேச செயலகங்களில் பிறப்பு, இறப்பு மற்றும் விவாக சான்றிதழ்களை ஒரு மணித்தியாலத்திற்குள் வழங்கும் நாடளாவிய வேலைத் திட்டம் 2013 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிவித்தலை பொது நிருவாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டப்ளியு. டீ. ஜே. செனவிரத்ன தெரிவித்தார்.

அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருக்கோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பிரதேச செயலகங்களின் தரவுகளை கணனிமயப்படுத்தும் வலையமைப்பு வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன..

வட மாகாணத்தில் உள்ள தரவுகளை கணனி வலையமைப்புக்கு உட்படுத்தும் பணி பூர்த்தியடைந்துள்ளன.

அத்தோடு தற்போது நாடளாவிய ரீதியில் 250 இற்கும் மேற்பட்ட பிரதேச செயலகங்களில் இப்பணி பூர்த்தியடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கொழும்பு ,களுத்தறை போன்ற மாவட்டங்களில் ஐந்து நிமிடங்களிலேயே பிறப்பு இறப்பு மற்றும் விவாக சான்றிதழ்களை வழங்கும் வேலைத்திட்டம் ஓரிரு வருடங்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டு விட்டன .

இம்மாவட்டத்தில் சகல பிரதேச செயலகங்களிலும் இப்பணி பூர்த்தியடைந்துள்ளமை அரசாங்கத்திற்குக் கிடைத்த பாரிய வெற்றியாகும் எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com