தெண்டுல்கரை விமர்சிப்பது மிக வருத்தமளிக்கிறது : சித்து
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான தெண்டுல்கர் மோசமான ஆட்டத்தால் விமர்சிக்கப்பட்டு வருகிறார். கடந்த 10 இன்னிங்சில் 153 ரன்களே எடுத்து இருந்தார்.முன்னாள் கேப்டன்கள் கபில்தேவ், கவாஸ்கர் ஆகியோர் தெண்டுல்கரை விமர்சித்து இருந்தனர். இந்த நெருக்கடி காரணமாக தனது எதிர்காலம் குறித்து தேர்வு குழுவினர் முடிவு செய்யலாம் என்று தேர்வு குழுவினரிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில் தெண்டுல் கருக்கு ஆதரவாக சித்து கருத்து தெரிவித்துள்ளார். முன்னாள் தொடக்க வீரரும், டெலிவிசன் வர்ணனையாளருமான சித்து கூறியதாவது:-
லட்சுமண், டிராவிட், கங்குலி ஆகியோர் அணியில் இல்லை. அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லாததால் இந்திய அணி இக்கட்டான நிலையில் உள்ளது எனவே அனுபவம் வாய்ந்த வீரர்கள் தேவை. இந்திய அணிக்கு சரியான வீரர்களை கண்டறியும் வரையில் தெண்டுல்கர் ஓய்வு பற்றி சிந்திக்க முடியாது.
அவரது ஓய்வு பற்றி சிந்திப்பது இது சரியான நேரம் இல்லை. தெண்டுல்கர் கடவுள் இல்லை அவரும் ஒரு மனிதர்தான். இதனால் சில நேரங்களில் தடுமாற்றம் ஏற்படத்தான் செய்யும். அவர் ஒரு பல்கலை கழகம். அவர் ஒரு கோகினூர் வைரம். அதை கண்ணாடியாக மாற்ற முடியாது.
தெண்டுல்கரை விமர்சிப்பது எனக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. எஞ்சிய 2 டெஸ்டிலும் அவர் சிறப்பாக ஆடுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு சித்து கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment