பாதுகாப்பு செயலர் கோத்தா சீனா விஜயம்
இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சீனாவில் இடம்பெறும் 9அவது சர்வதேச விமானப் போக்குவரத்து கண்காட்சியில் கலந்து கொள்வதற்காகவே சீனாவிற்கு விஜயம் செய்துள்ளார்.சீனா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் தங்கள் இராணுவத்தினருக்கு இடையிலான உறவுகளை அதிகரிக்க உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சீனாவிற்கு சென்ற பாதுகாப்பு செயலாளர் சீன பாதுகாப்பு அமைச்சர் லியாங் குவாங்லியை, இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தலைமையிலான ஒரு குழுவினர் சந்தித்தனர்.
சீனாவின் தலைநகரான பீஜிங்கில் நடைபெற்ற இவ் உயர்மட்டக் கூட்டத்திலேயே இரு நாடுகளும் தங்கள் இராணுவத்தினர் இடையே உறவுகளை அதிகரித்து நட்புறவினை பேணவுள்ளதாக உறுதி எடுக்கப்பட்டன.
0 comments :
Post a Comment