ராஜீவ் காந்தி கொலையுடன் வைகோ, கருணாநிதிக்கு தொடர்பு? கசியும் உண்மைகள்!!
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவர் கார்த்திகேயன் கட்டளைப்படி தி.மு.க.தலைவர் கருணாநிதி மற்றும் வைகோவிடம் முறையாக விசாரணை நடத்தவில்லை என இந்த வழக்கின் முதன்மை விசாரணை அதிகாரி கே.ரகோத்தமன் குற்றம் சாட்டி உள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த முதன்மை விசாரணை அதிகாரி ரகோத்தமன், "ராஜீவ் காந்தி கொலைக்கான கூட்டுச் சதி - சிபிஐ கோப்புகளிலிருந்து´´ என்ற பெயரில் ஒரு நூல் எழுதி உள்ளார்.
விசாரணையின்போது, விடுதலைப் புலிகள் அமைப்பின் புகலிடமான யாழ்ப்பாணத்திற்கு வைகோ சென்று வந்தது தொடர்பான ´இன் டைகர்´ஸ் கேவ்´ உள்ளிட்ட 500 விடியோ கேசட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ரகோத்தமன் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் பிரபாகரனை சந்தித்த வைகோ, ராஜீவ் காந்தியைப் பற்றி இழிவாகப் பேசியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது, பொட்டு அம்மானை பிரபாகரன் அறிமுகப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக வைகோவிடம் விசாரிக்கப்படவில்லை. இந்தியா-இலங்கை ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்பாக அசோகா ஓட்டலில் தங்கியிருந்த பிரபாகரனுடன் பேசிய உரையாடல் பற்றி வைகோவிடம் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆதாரங்களின்படி, அசோகா ஓட்டலில் தங்கியிருந்த பிரபாகரனுடன் இன்டர்காமில் வைகோ பேசியுள்ளார், அப்போது, ராஜீவ் காந்தி தனது முதுகில் குத்தி விட்டதாகவும், இந்தியா-இலங்கை இடையிலான ஒப்பந்தம் ஈழப் பிரச்னைக்குத் தீர்வாகாது என்றும் பிரபாகரன் வைகோவிடம் கூறியுள்ளார்.
ஆனால், வழக்கு விசாரணையின்போது, விடியோவிலிருந்த குரல் பதிவு தன்னுடையதுதான் என்பதை ஏற்க வைகோ மறுத்து விட்டார் என ரகோத்தமன் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
தி.மு.க.தலைவர் கருணாநிதி பற்றியும் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். 1991ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூருக்கு வந்திருந்த ராஜீவ் காந்தியுடனான சந்திப்பை கருணாநிதி ரத்து செய்து விட்டார். எதற்காக இந்த சந்திப்பை ரத்து செய்தார் என்பதற்கான காரணத்தைக் கண்டறிந்து சிறப்புப் புலனாய்வுக் குழுவின் கவனத்துக்குக் கொண்டு சென்று, இதுகுறித்து கருணாநிதியிடம் விசாரணை நடத்துமாறு கேட்டுக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், கருணாநிதியிடம் சிறப்புப் புலனாய்வு அதிகாரி விசாரணை மேற்கொண்டதாகவும், காவல் துறை டிஜிபி ரங்கசாமி அறிவுரையின் பேரில் ராஜீவை சந்திக்கவில்லை என்று தெரிவித்ததாகவும் கூறினார். இதைப் பிரச்னை ஆக்க வேண்டாம் என சிறப்புப் புலனாய்வுக் குழு தலைவர் கார்த்திகேயன் தன்னிடம் கோபமாகக் கூறியதாக ரகோத்தமன் கூறியுள்ளார்.
ராஜீவ் கொலை வழக்கில் வைகோ மீது சந்தேகம் இருப்பதாகவும், அவரை அரசுத் தரப்பு சாட்சியாக சேர்க்க வேண்டாம் என்றும் எதிர்ப்பு தெரிவித்ததாகத் தெரிவித்தார்.
ஆனால், வைகோவுக்கு எதிராக போதுமான ஆதாரம் இல்லை என கார்த்திகேயன் தெரிவித்தார்.
கருணாநிதி ஸ்ரீபெரும்புதூர் செல்வதைத் தவிர்த்தது பற்றி விசாரணை நடத்தவும் கார்த்திகேயன் மறுத்து விட்டார் என ரகோத்தமன் தெரிவித்துள்ளார். எனினும், 40 உறுப்பினர்களுடன் மேற்கொள்ளப்பட்ட விசாரணை பற்றி யாரும் கேள்வி எழுப்ப முடியாது என கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை அறிக்கையை 2 நீதி குழுக்கள் ஏற்றுக்கொண்டு பாராட்டி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றமும் பாராட்டி உள்ளதாக கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
1 comments :
Every action has a opposite and equal reaction.One day masks of the culprits will be taken out,that hide
the true character.
Post a Comment