Tuesday, November 6, 2012

பாகற்காய் ஜூஸ்

தேவையானவை:

பாகற்காய் – 200 கிராம்
மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்
சீரகத்தூள் – கால் டீஸ்பூன்
பனங்கல்கண்டு – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

* பாகற்காயை வில்லைகளாக நறுக்கி விதை நீக்கி ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்.

* இதை ஆற வைத்து, மிக்ஸியில் நன்கு அரைத்து, தண்ணீர், மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலக்கவும்.

* பிறகு உப்பு, பனங்கல்கண்டு போட்டுக் கலந்து பருகவும்.

குறிப்பு: சர்க்கரை நோய் உள்ளவர்கள் மட்டுமல்லாது மற்றவர்களும் காலையில் வெறும் வயிற்றில் இதைக் குடித்தால் வயிற்றில் இருக்கும் குடல்புழு நீங்கி, நன்கு பசியெடுக்கும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com