சுவிஸிலிருந்து கொந்தராத்து கொலைக்குச் சென்ற தமிழ் இளைஞர்கள் மூவர் பிராண்சில் கைது!
பிராண்ஸ் எனும் பிரதேசத்தில் கடந்தவாரம் இருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். காதல் விவகாரம் ஒன்றில் ஏற்பட்ட சிக்கல் ஒன்று காரணமாக கொந்தராத்துக்கு கொலை அல்லது அடிதடிக்கு சென்றவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.
கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவர் பாரிஸ் காடையர் குழுவொன்றை சேர்ந்த தமிழலகன் தமிழ்ப்பிரியன் எனவும் சுவிஸிலிருந்து சென்றோர் ஜெயபாலன் ஜெயரூபன் , ராஜேந்திரன் அம்பாரிஸ், தில்லைநாதன் சுதாகர் எனப்படுவோர் எனவும் தெரியவருவதுடன் இவர்கள் நால்வருமே வவுனியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் அறியக்கிடைக்கின்றது. இவர்கள் மீதான கடத்தல் , கொலைமுயற்சிக்கான குற்றச்சாட்டுக்கள் நிருபணமாகும் சாத்திக்கூறுகள் உள்ளதாகவும் தெரியவருகின்றது.
சண்டியர்களை வைத்து சாதிக்கும் யாழ் கலாச்சாரம் தற்போது புலம்பெயர் தேசத்திற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. சுவிஸ் சூரிச் மாநிலம் , பாரிசில் லாச்சப்பல் மற்றும் பிரித்தானியா கனடா ஆகிய நாடுகளில் பிரதான நகரங்களில் இவ்வாறான காடையர் குழுக்கள் இயங்கிவருகின்றன. இக்குழுக்களில் பிரதான நபர்களாக புலிகளின் இளையோர் அமைப்பைச் சேர்ந்தோரே இயங்குகின்றனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இக்குழுக்கள் தங்களை புலிகளின் ஆதரவாளர்கள் என வெளிக்காட்டிக்கொள்கின்றனர். இவர்கள் தம்மை புலிகளின் ஆதரவுக்குழுக்கள் என வெளிக்காட்டும்போது பொதுமக்கள் இவர்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்ய அஞ்சுகின்றனர்.
1 comments :
மூதேவிகள் எங்கு இருந்தாலும் திருந்தப்போவதில்லை.
தமிழீழம், தாயகம் என்று தமிழினத்தை அழித்து, தமிழ் மண்ணை பறிகொடுத்து, மிஞ்சியவர்களை அரைக்கோவணத்தில் அனாதையளாக, விதவைகளாக, விசர்களாக ஏன் விபச்சாரிகளாக அலையவிட்டு எதிரியின் காலில் விழுந்து கொத்துவாங்கிய வீரர் மரணமடைந்து சரித்திரம் படைத்த கதை முடிந்து விட,
இப்போ தமிழீழ விடுதலை பெயரில் புலம்பெயர் நாடுகளில் இதுவரைக்கும் சேர்த்த பணம், சொத்துக்களை சுருட்டி, தங்கள் பிழைப்புகளை, சுகங்களை தொடர்ந்தும் தக்க வைக்கும் செயல் பாடுகளில் பல மனிதத் துரோகிகள் ஈடுபட்டு வருகிறது. அதன் பிரதிபலிப்புகளை புலம் பெயர் தமிழினம் இனிமேலும் உணராவிடின், புலம்பெயர் தமிழினம் மனிதர்கள் அல்ல வெறும் முண்டங்களே.
Post a Comment