Sunday, November 11, 2012

வடமாகாண சபையின் ஏற்பாட்டில் யாழில் கண்காட்சி

வடமாகான சபையின் ஏற்பாட்டில் 'ஒன்றினைந்து முன்னேற்றத்தை நோக்கி' என்னும் தொனிப் பொருளிலான மாபெரும் கண்காட்சி எதிர்வரும் 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் மூன்று நாட்கள் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.யாழ்.சும்பிரமணியம் பூங்கா முன்பாக உள்ள யாழ்.மாநகர சபை வளாகத்தில் இது நடைபெறவுள்ளது.

14 ஆம் திகதி புதன்கிழமை காலை 9 மணிக்கு இக்கண்காட்சி ஆரம்பமாகும். 2009 ஆம் ஆண்டிற்குப் பின்னர் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகள் மற்றும் மாகாண அமைச்சி;ன் செயற்பாடுகளும் இங்கு காட்சிப்படுத்தப்படவுள்ளன.

குறிப்பாக சுகாதாரம், உட்கட்டமைப்பு, வீடமைப்பு, போக்குவரத்து, கல்லி மனிதாபிமானம், பொதுச்சேவை, சமூக சேவைகள், நலன்புரி விடயங்கள், கைத்தொழில் ஆகிய பிரதானமான 7 துறைகளை உள்ளடக்கியதாக இக்கண்காட்சி நடைபெறவுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com