ஆளும் கட்சி ஊழல் பெருச்சாளிகளுக்கு விரைவில் பதில் அளிக்கப்படும் மேவின் சில்வா
வெள்ளைத் தாமரையென நினைத்து ஜனாதிபதியால் பூஜை அறையில் வைக்கப்பட்ட சில பதவிகள் இன்று நாற்றமடிக்கின்றன. என்று பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் 67ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு இரு பாலங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் அமைச்சர் மேர்வின் சில்வா தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஊழல் மோசடிகளை மேற்கொண்டு, மக்களின் சொத்துக்களை சூரையாடி குடிசைகளை மாளிகைகளாக நிர்மாணித்தக்கொண்டவர்களுக்கு விரைவில் பதில் கிடைக்கும்.
சிலர் ஆணி அடித்தாற்போல பதவிகளில் ஒட்டிக்கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் அப்பதவிகளிலிருந்து போகாவிட்டால் அவர்களை நாம் போக வைக்க வேண்டும் என்றார் அமைச்சர்.
0 comments :
Post a Comment