ஒலுவிலில் வாகனவிபத்து ! நடாத்துனர் ஸ்தலத்திலேயே பலி!
(எஸ்.ஐ.பர்ஸாத் அட்டாளைச்சேனை) கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியின் ஒலுவில் எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக இன்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அக்கரைப்பற்று, கோமாரி பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான கணேசமூர்த்தி என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் அக்கரைப்பற்று- மட்டக்களப்பு தனியார் பஸ்ஸின் நடத்துனருமாவர்.
பயணிகளுடன் மட்டக்களப்பிலிருந்து பயணித்துக் கொண்டிருந்த போது ஒலுவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பஸ்ஸை நிறுத்துவதற்கு முற்பட்ட போது மிதிபலகையிலிருந்து தவறி விழுந்துள்ளார். இதனால், இவரின் தலையில் பஸ் ஏறியமையினாலேயே இவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து தொட்ர்பான மேலதிக விசாரனைகளை அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் விஜயரத்தின தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment