ஆனந்தராசாவும் வல்லை மகளீர் மகா வித்தியால அதிபர் அம்மாவும் கசமுசாவாம்..
வல்லை மகளீர் மகா வித்தியாலய அதிபராக உள்ளார் மங்களேஸ்வரி சித்திலிங்கம். இவருக்கு அண்மையில் இடமாற்ற அறிவித்தல் ஒன்று கிடைத்துள்ளது. அதிபரின் இடமாற்ற அறிவித்தலை அறிந்த வல்வெட்டித்துறை பிரதேச சபைத்தலைவர் ஆனந்தராசா மாணவர்களை ஒன்றுகூட்டி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளார். ஆர்ப்பாட்டத்தின் பயனாக அதிபரின் இடமாற்றம் ரத்தாகியுள்ளது.
ஆனால் இடமாற்றம் இரத்தாகிய செய்தி அறிந்த அதிருப்தி காரர்கள் மிகவும் அநாகரிகமாக செயற்பட்டுள்ளனர். பாடசாலையினுள் இரவு நேரத்தில் புகுந்த அவர்கள் அனந்தராசாவும் அதிபர் திருமதி மங்களேஸ்வரி சித்திலிங்கமும் கசமுசாவில் ஈடுபடுவது போன்ற சித்திரங்களை வரைந்துள்ளதுடன் மிகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளையும் எழுதியுள்ளனர். அங்கே அதிபருக்கும் ஆனந்தராசாவுக்கும் இடையே கள்ள தொடர்புகள் நீண்ட நாட்கள் இடம்பெற்றுவருவதாகவும் எழுதியுள்ளனர்.
பாடசாலை ஒன்றினுள் புகுந்து இவ்வாறன நச்சு வேலைகளை செய்தவர்கள் யார் என்று விசாரணைகளை நடாத்துகின்றபோது, அது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்வீட்டு குத்துவெட்டுக்களின் வெளிப்பாடு என அறியக்கிடைக்கின்றது.
வல்வெட்டித்துறை பிரதேச சபையின் பிரதி தலைவராக சதீஸ்குமார் உள்ளார். சதீஸ்குமாருக்கும் ஆனந்தராசாவுக்குமிடையே பதவி போட்டிகள் இடம்பெற்று வருகின்றது. இருவரும் மறைமுகமாகவும் நேரடியாவும் மோதிக்கொள்கின்றனர்.
ஆனந்தராஜாவின் ஆதரவாளர்கள் சதீஸ்குமாரால் பழிவாங்கப்படுவதும், சதீஸ்குமாரின் ஆதராவாளர்கள் ஆனந்தராஜாவினால் பழிவாங்கப்படுவதும் தொடர்கதைகளாகி வருகின்றது. இவ்வாறுதான் அதிபர் அம்மாவின் இடமாற்றமும் இடம்பெற்றுள்ளது. அதிபர் ஆனந்தராஜாவின் ஆதரவாளர் அல்லது உறவினர் என்பதால் சதீஸ்குமார் தனது செல்வாக்கின் ஊடாக அவருக்கு இடமாற்ற ஏற்பாடு செய்துள்ளார். மாணவர்களை ஆனந்தராஜா அழைத்து ஆர்ப்பாட்டம் நாடாத்தியதால் இடமாற்றம் ரத்தான செய்தி சதீஸ்குமாருக்கு கடுப்பேற்றியுள்ளது.
அரசியல் பதவிமோதல்களுக்காக பாடசாலை வளாகத்தில் வரையப்பட்ட சித்திரங்கள் கண்டனத்திற்குரியவை.
0 comments :
Post a Comment