கஸகஸ்தானில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு
கஸகஸ்தான் சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு அமோக வரவேற்வு அளிக்கப்பட்டுள்ளது.கஸகஸ்தான் ஜனாதிபதி நூர் சுல்தான் நஸார்பேய்வ்வின் அழைப்பின் பேரில் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கசகஸ்தான் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷயும் அந்நாட்டு வர்த்தக அமைச்சர் யர்போலட் தொசேயாவ உள்ளிட்ட பிரதிநிதிகள் கசகஸ்தான் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் ,ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஊவா மாகாண முதலமைச்சர் சசேந்திர ராஜபக்ஷ ஆகியோரும் ஜனாதிபதியுடன் கசகஸ்தான் பயனமானார்கள்.
கஸகஸ்தான் ஜனாதிபதி நூர் சுல்தான் நஸார்பேய்வ் மற்றும் பிரதமர் செயிக் எக்மெடோவ் ஆகியோருடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
பொருளாதார- சமூக மற்றும் கலாசார ஒப்பந்தங்கள் பலவும் இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. இதேவேளை ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் உதயாங்க வீரதுங்கவும் இங்கு பிரசன்னமாயிருந்தார்.
.
0 comments :
Post a Comment