திரிபோஷா இறக்குமதிக்கு தனியார் தனியாருக்கு தடை
தனியார் நிறுவனங்கள் திரிபோஷா இறக்குமதி செய்வதை தடை செய்ய விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தீர்மானித்துள்ளார். திரிபோஷா தயாரிப்புக்குத் தேவையான சோயா போஞ்சி இலங்கையில் போதியளவு கையிருப்பில் இருப்பதாலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
சோயா அவரையை இறக்குமதி செய்வதற்காக தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டாமென அறிவிக்கப்படவுள்ளது.
சோயா அவரையை விவசாயிகளிடமிருந்து கிலோ 110 ரூபாவுக்கு பெற்றுக் கொள்ளலாம். வெளிநாடுகளில் இருந்து இதனை இறக்குமதி செய்யும் போது தீர்வையின்றி சோயா அவரை கிலோ 130 ரூபாவாகிறது.
3000 மெட்ரிக் தொன் சோயா அவரை கையிருப்பில் உண்டு. இது நாட்டில் தேவைக்குப் போதுமானது அண்மையில் ஏற்பட்ட கடும் வரட்சி காரணமாக சோயா அவரை அறுவடைக்கு பாதிப்பு ஏற்பட்டது. 95 ரூபாவாக இருந்த சோயா அவரை 110 ரூபாவரை அதிகரித்துள்ளது என்றார்.
0 comments :
Post a Comment