சுவிட்சர்லாந்தில் நமது பெண்களின் அந்தரங்கம் வீடியோ காட்சியாக்கப்படும் கதை தெரியுமோ..
வணக்கம்... வணக்கம்... இண்டைக்கு அரசியலுக்கு அப்பால எங்கட பிள்ளைகளுக்கும் அதுகளைப் பெத்துப்போட்டு கண்டுகொள்ளாமல் திரியுற பெத்ததுகளுக்கும் ஒரு முக்கியமான சேதி சொல்லப் போறேன்.இண்டைக்கு பலருக்கும் வெளிநாட்டு மாப்பிள்ளையெண்டால் பாருங்கோ குண்டியும் கழுவி விடத்தயாரான நிலையில தான் பல பெத்ததுகள் இருக்குதுகள். அவன் பாவி அங்க என்ன? செய்கிறான் எண்டு யோசிக்காதுகள் ஏதோ வெளிநாடு எண்ட மோகத்தில விழுந்து கிடக்குதுகள்.
அவையளும அங்க கக்கூசு கழுவுறதும். ஹோட்டல சாப்பாட்டு கோப்பை கழுவுறதுமா இருந்திட்டு இஞ்ச வந்து கண்தெரியாத என்னைப் போல கிழடுகள் போடுற கண்ணாடி ,கால்ல எந்த நேரமும் விதவிதமா சப்பாத்து, விதம் விதமாக கலர் கலரா உடுப்பென்ன மடிப்பென்ன உதோடு, எங்கட ஆட்களை மடக்கிறதுக்கு அரை குறை இங்கிலீசு அவங்கட அட்டகாசம் இஞ்ச தாங்க முடியல.
உவங்கள் கொஞ்சம் பறவாயில்லை உந்த வெளிநாட்டில இருந்து வாற பெட்டையள் இருக்கிறாளுகள், அவளுகளுக்கு தாங்கள் வெளிநாட்டில இருக்கிற நினைப்போ என்னமோ தெரியாது உள்ள போடவேண்டியதுகளோடு இஞ்சை அலையுதுகள்.
பத்தாததுக்கு அவைக்கு சின்ன வயசில போட்டது போல உடுப்புகளோட, இஞ்ச ஒரு பெடியனை மடக்கி அவனோட பைக்கில சுத்து சுத்தெண்டு சுத்திபோட்டு அங்க இங்க நிண்டு கிஸ்சு பண்ணி அப்பி இப்படி படம் எடுத்துப் போட்டு போகேக்க அவனை கழட்டி விட்டுவிட்டு போறது தாங்க முடியல
சரி இப்ப விஷயத்துக்கு வருவோம். போன சில கிழமை என்ர மருமோன் பெடியன் சுவிசில இருந்து என்னொட கதைச்சவன். அவன் சொன்ன விஷயம் பாருங்கோ எனக்கு இடி இடிச்சது போல கிடந்தது.
உந்த சுவிசில இருந்து ஒருத்தன் வவுனியாவுக்கு வந்து போயிருக்கான்.அவன் இங்க வந்திருந்தப்போ பக்கத்து வீட்டில இருந்த இரண்டு பெண்டுகளை மேய்ச்சுப்போட்டு படுத்தும் எழும்பிவிட்டான். இதுல என்ன வேடிக்கையென்னவெண்டால் இரண்டு பேரும் அக்கா தங்கைமார் வெளிநாட்டு மாப்பிள்ளையெண்டதும் பாவாடையைத் தூக்கி காட்டியிருக்கினம்.
அவன் பாவி அந்த அப்பாவி பிள்ளைகளோடு மாறி மாறி படுத்து அதை உந்த கான் போன்ல வீடியோ எடுத்து கொண்டு போட்டான். உது அந்த பிள்ளைகளுக்கும் தெரியாது போல. அந்த ஒரு அப்பனுக்கு பிறக்காதது அதைக்கொண்டு போய் வெளிநாட்டில இருக்கிற தன்னப்போல சனியனுகளுக்கு அந்த வீடியோவை காட்டிக்கெணர்டு திரியுது.
இது மட்டுமில்லை இன்னொரு விசர் ஒண்டு அதுவும் சுவிசில இருந்து தான் வந்து யாழ்ப்பாணத்தில ஒரு பொம்பிளையை கல்யாணம் பண்ணி அந்த பிள்ளையை ஐந்து வருஷமாக இங்க விட்டுட்டு அவளை வெளிநாட்டுக்கும் கூப்பிடாமல் தானும் இங்கவராமலும் இருக்குது.
இதிலும் கொடுமை என்னவெண்டால் அந்த பிள்ளையோட கதைக்கிறதும் இல்லையாம். பாவம் அந்த பிள்ளையைக் கட்டிக்கொடுத்ததுகள் வாழ அனுப்பி வைக்கவிருந்த நேரத்தில உவன்பாவி நடுத்தெருவில் தவிக்க விட்டுட்டு திரியுறான். அவன் அங்க என்ன செய்யுறான் எண்டும அதுகளுக்கு தெரியல
உப்பிடி தான் பல பெண்டுகள் இண்டைக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை நம்பி தங்கட வாழ்க்கையை தொலைச்சிட்டு திரியினம். இதில எங்கட பெண்டுகளுக்கு அவர் கனடா. லண்டன் சுவிஸ் எண்டு சொல்லுறதுக்கும் லிப்ரிக்சும் ஜபுறோவும் அப்பிக்கொண்டு திரியுறுதுக்கு ரொம்ப விருப்பம் தானே
ஒண்டை மட்டும் கடைசியா இந்தக் கிழவன் சொல்ல விரும்புறன் வெளிநாட்ட மாப்பிள்ளையெண்டு இஞ்ச வாறவன் என்ன செய்யுறான் எண்டு இப்பவாவது பெத்துப்போட்டு திரியுறதுகளுக்கு நல்ல உறைக்க சொல்லுறேன். இதைப்பார்த்தாவது திருந்துங்கோ தயவு செய்து அரசன நம்பி புருஷனைக் கைவிடாமல் ஒழுங்கா நல்ல வாழ்க்கையை வாழுங்கோ அப்ப பிறகென்ன கிழவனை மீண்டும் சந்திப்போம்.
0 comments :
Post a Comment