ஜனாதிபதியின் பிறந்த நாள் இன்று - நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு நிகழ்வு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதிலும் விசேட பூஜைவழிபாடுகள் இடம்பெற்றதோடு விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் பிறந்தநாள் இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெகுசிறப்பாக கொண்டாப்பட்டது. இதனை முன்னிட்டு போதி பூஜைகள், பிரித் பாராயணம், விளக்கு பூஜை, தானம் வழங்குதல் என பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் பிறந்த நாள் மற்றும் பதவிப் பிரமாண நாளை முன்னிட்டு இந்த விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அத்தோடு நாடு முழுவதிலும் மரம் நாட்டும் விசேட செயற்றிட்டம் ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஒரு வார காலத்திற்கு இந்த நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெறும் என்றும் சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment