Sunday, November 4, 2012

உலகின் நீடித்த அபிவிருத்தி மற்றும் சக வாழ்விற்கு அடிப்படை சமாதானமே. ஜனாதிபதி

சமாதானத்திற்கான சர்வதேச சமயங்களுக்கிடையிலான மற்றும் கலாசார சம்மேளனத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார். உலக சமாதானத்திற்காக அனைத்து சமயங்களும் ஒன்றிணைந்திருப்பது,  வெற்றிகரமான திருப்புமுனையென்று அவர் கூறியுள்ளா அவர் சமாதானத்தினூடாக, ஒழுக்க விழுமியங்களை போன்று, சிறந்ததொரு சமூகமும் உருவாகுமென்றும் கூறியுள்ளார்.

சமாதானத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும், ஜனாதிபதி சுட்டிக்காட்டிய அவர் உலக சமாதானத்திற்காக அனைத்து சமயங்களும் ஒன்றிணைந்துள்ளமை, மகிழ்ச்சிக்குரிய விடயமென்றும் தெரிவித்துள்ளார்.

கொடிய பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்து, இனங்களுக்கிடையேயும், சமயங்களுக்கிடையேயும் நலலுறவை கட்டியெழுப்பியுள்ள இலங்கை தேசத்தில் இம்மாநாட்டை நடாத்த முடிந்தமை, மகிழ்ச்சிக்குரிய விடயமென்றும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இம்மாநாட்டில் கலந்து கொண்ட உலகப்பிரபல சீன தேசிய பேராசிரியர் சங்கைக்குரிய சின் கொங், சமாதானம் தொடர்பாக, முழு உலகிற்குமே முன்மாதிரியை வழங்கியுள்ள இலங்கையிலிருந்தே, உலக சமாதானத்தை உருவாக்கும் பயணம் ஆரம்பிக்கப்பட வேண்டுமெனக் தெரிவித்துள்ளார்.
 
30 வருடகால பயங்கரவாதத்தினால் இலங்கை மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனை இளைஞர்களின் சக்தி மற்றும் துணிச்சல்மிக்க தலைமைத்துவத்தை கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஒழிக்கப்பட்டு, சுதந்திரமான தேசம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில், அமைதியும், சுதந்திரமுமிக்க சூழல் உருவாகியுள்ளது. இலங்கை தற்போது பாரிய அபிவிருத்தி இலக்கினை எட்டி வருகிறது. முழு உலகிற்குமே, முன்மாதிரியை காண்பித்துள்ள இலங்கையிலிருந்தே உலக சமாதானத்திற்கான பயணம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என வேண்டியுள்ளார்.

 ஜனாதிபதி மற்றும் பேராசிரியர் சங்கைக்குரிய சின் கொங்கிற்கிடையே, ஞாபகார்த்த சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. அதனை தொடர்ந்து, சர்வமத தலைவர்கள், சின் கொங் தேரருக்கு தங்கச் சால்வையை அணிவித்தனர். மகா சங்கத்தினர் உட்பட சர்வமத தலைவர்கள், அமைச்சர்கள் உட்பட யுனெஸ்கோ சம்மேளனத்தின் தலைவி கலாநிதி கெட்லின் பொக்ஸே ஆகியோரும், மாநாட்டில் கலந்து கொண்டனர். இம்மாநாடு, எதிர்வரும் 10 ஆம் திகதி வரை கொழும்பில் இடம்பெறும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com