அதிகரிக்கின்றது வெளிநாட்டு மதுபானங்களின் விலை
2013ம் ஆண்டு வரவு செலவுதிட்டம் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து விஸ்கி மற்றும் பிரண்டி உட்பட உள்நாட்டில் பயன்படுத்தப்படும் அனைத்து வகையான வெளிநாட்டு மதுபானங்களினதும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என டிஸ்டிலர்ஸ் (லங்கா) கம்பனி அறிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கு வரவு செலவு திட்டத்தின் ஊடாக 25 சதவீத வரி அதிகரிக்கப்பட்டது. இதனையடுத்தே, இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது என குறித்த நிறுவனத்தின் பிரதம நிறைவெற்று அதிகாரி அறிவித்துள்ளார்.
இதனால் ஒரு போத்தல் விசேட சாராயம் புலு மற்றும் வைட் லேபல் சாராயம் ஆகியவற்றின் விலை 20 ரூபாவினாலும் ஒரு போத்தல் விஸ்கி மற்றும் பிரண்டி தயாரிப்புக்களின் விலை 30 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டள்ளது.
இதேவேளை உள்ளுர் உற்பத்தியான தென்னஞ் சாரயத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment