பாராளுமன்ற தெரிவுக்குழுவின் பரிந்துரை பிரதம நீதியரசரால் புறக்கணிப்பு
சட்டவுரைஞர்கள் இன்றி ஆஜராகுமாறு பாராளுமன்ற தெரிவுக்குழுவினால் பிரதம நீதியரசருக்கு விடுக்கப்பட்ட பணிப்புரையை பிரதம நீதியரசர் ஏற்க மறுது;து விட்டார். இதேவேளை இன்றைய தினம் பிரதம நீதியரசர் சட்டவுரைஞர்களுடனேயே தெரிவுக்குழு முன்னிலையில் அவர் ஆஜராகியுள்ளார்.
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முதலாவது அமர்வு இன்று வெள்ளிக்கிழமை காலை 10.40 மணிக்கு ஆரம்பமானது. அந்த தெரிவுக்குழு முன்னிலையில் பிரதம நீதியரசர் முற்பகல் 11.21 மணியளவில் ஆஜரானார்.
பிரதம நீதியரசருக்கு தமது தரப்பு எதிர்ப்புகளை தெரிவிப்பதற்கு எதிர்வரும் 30 ஆம் திகதிவரை கால அவகாசம் வழங்கிய தெரிவுக்குழு அதன் அடுத்த அமர்வை டிசெம்பர் 04ஆம் திகதிவரை ஒத்திவைத்தது.
இதேவேளை பிரதம நீதியரசர் தொடர்பான குற்றப் பிரேரணைக்கு எதிரான மனுக்களின் தீர்ப்பு வரும் வரை பிரதம நீதியரசர் தொடர்பான குற்றங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு, அதன் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை பரிந்துரை செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment