தேர்தல் இடாப்பு தொடர்பான ஆட்சேர்பனைகள் ஆராயப்படுகின்றன- தேர்தல் ஆணையாளர்
2012 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பு தொடர்பாக கிடைத்துள்ள ஆட்சேர்ப்பனைகள் குறித்த விசாரணைகள் ஆராயப்படும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.2012 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பு மறுசீரமைக்கப்பட்டதன் பின்னர் பட்டியல்கள் காட்சிப்படுத்தப்பட்டன. குறித்த பட்டியல்களின் ஆட்சேபனைகள் தொடர்பாக இன்று முதல் அடுத்த மாதம் 12 ஆம் திகதி வரை விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.
மாவட்ட பிரதி சிரேஸ்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர்கள் விசாரணைகளை நடத்தி, தீர்மானங்களை எடுக்கவுள்ளனர்.
விசாரணைகள் நடத்தப்படும் இடம், நேரம் ஆகியன விண்ணப்பதாரிகளுக்கு பதிவு தபாலில் அனுப்பப்பட்டுள்ளன. இவ்வாண்டு 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இரட்டை பதிவுக்காக விண்ணப்பித்துள்ளனர்.
அவர்களுள் தாம் பதிவு செய்வதற்கு விருப்பமான விலாசத்தை கேட்டறிந்து கடிதங்களை அனுப்ப தேர்தல்கள் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.
0 comments :
Post a Comment