உலக வங்கியின் தலைவர் நாளை இலங்கை விஜயம்
உலக வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் ஸ்ரீ முலியாணி இந்திராவதி நான்கு நாள் விஜயமாக இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு அறிவித்தள்ளது.நான்கு நாள் உத்தியோக பூர்வவிஜயமாக நாளை வியாழக்கிழமை இவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
எதிர்வரும் 19 திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் இவர் இங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களை பார்வையிடவுள்ளார்.
மேலும் நாட்டின் முன்னேற்றத்திற்கு உலக வங்கியின்; எவ்வாறு கூடுதலான ஒத்துழைப்புகளை வழங்குவது தொடர்பிலும் ஆராயவிருக்கின்றார்.
இலங்கை அரசாங்கத்திற்கும் உலக வங்கிக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்துவது தொடர்பில இவர் தனது விஜயத்தின் போது முக்கிய கவனம் செலுத்தவுவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment