சட்டவிரேதமாக அவுஸ்ரேலியாவரும் எருவக்கும் அகதி அந்தஸ்து இல்லை- அவுஸ்ரேலிய அரசு
இலங்கையர் எவருக்கும எமது நாட்டில் அகதிகள் அந்தஸ்து வழங்கப்பட மாட்டாது. முகவர்களின் ஏமாற்று வழியில் சிக்குண்டு, தமது சொத்துகளையும் உயிரையும் மாய்த்துக்கொண்டு அவுஸ்ரேலியாவுக்குள் வர வேண்டாமென, அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.இலங்கையர்கள் பலர் சட்டவிரோதமாக படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவில் குடியேறும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இது தொடர்பில் செய்தியாளர்களை அறிவுறுத்தும் மாநாடு, இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் கொழும்பில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அவுஸ்திரேலிய குடியேற்ற மற்றும் பிரஜா உரிமை தொடர்பான அமைச்சர் கருத்து தெரிவித்தார்.
இலங்கையர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் குடியேற வேண்டாம். கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவில் குடியேற எடுக்கப்படும் முயற்சிகளினால், உயிராபத்துகள் கூட ஏற்படுகின்றன. இது தொடர்பில் விளக்கம் பெற்று செயற்படுங்கள்.
அவுஸதிரேலியாவிற்கு வருகை தருவோருக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் போலி பிரசாரங்களுக்கு ஏமாற்றமடைய வேண்டாம். அவுஸ்திரேலியாவிற்கு வந்தவுடன், அங்கு வீசா வழங்கப்பட மாட்டாது.
சட்டவிரோதமாக வருகை தருவோருக்கு எக்காரணம் கொண்டும் அகதிகள் அந்தஸ்து வழங்கப்பட மாட்டாது. அவர்களை இரு தீவுகளில் தடுத்து வைத்து, மீள இலங்கைக்கு அனுப்புவோம். நிதியோ அல்லது எந்தவித உதவியோ அவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது என்றார்.
தொடர்ந்து இங்கு கருத்து தெரிவித்த அவுஸ்திரேலிய குடியேற்ற விவகாரம் தொடர்பான தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் ஜோஸ் அல்வாரெஸ், சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவில் குடியேறுவதன் மூலம், எதுவித பயனையும் பெற முடியாதென தெரிவித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment