அரசாங்கம் நீதித்துறையில் தலையிடவில்லை குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் நீதியமைச்சர்
அரசாங்கம் நீதித்துறையில் தலையீடு செய்கிறது என்ற எதிர்க்கட்சியினரின் கூற்றுக்களை முற்றாக நிராகரிப்பதாக நீதியமைச்சர் ரவூக் ஹக்கீம் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நீதி அமைச்சின் வரவுசெலவுத்திட்ட குழு நிலை விவாதத்துக்கு பதிலளித்து உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் யுகத்தில் நீதித்துறையில் பல புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
எனினும், நீதியமைச்சின் குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய பெரும்பாலானோர் பிரதம நீதியரசர் தொடர்பு பட்ட விடயத்தில் அரசு நீதிமன்றத்துக்கு எதிராகச் செயற்படுகிறது என்பதைக் காட்டும் வகையிலேயே கருத்துக்களை முன் வைத்தனர்.
ஜ.வி.பி. எம்.பி. விஜித ஹேரத் நீதித்துறை சீர்குலைந்துபோயுள்ளதாக விமர்சித்தார். இவ்வாறு விமர்சிப்பவர்கள் ஒன்றைக் கவனத்தில் கொள்வது முக்கியம். நாம் ஒருபோதும் நீதித்துறை சீர்குலைய ,டமளிக்க மாட்டோம்.
இன்னும் கூட பல நியமனங்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் ,டம்பெற்றன. அடிப்படையற்ற விடயங்களைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு மேற்கொள்ளப்படும் விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
நீதிச்சேவை ஆணைக்குழுவுடன் இணைந்து நீதித்துறையின் பல்வேறு துறைகளையும் நீதித்துறையின் நிர்வா கத்தையும் பலப்படுத்த பல திட்டங்களை வகுத்துச் செயற்பட்டு வருகின்றோம்.
எதிர்க் கட்சியினரால் விமர்ச்சிக்கப்படுகின்ற பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை நீதிமன்ற பிரதானிக்கு எதிரானதேயன்றி நீதித்துறைக்கு எதிரானதல்ல. இதனை முழு நீதித்துறைக்கும் எதிரானது என காட்ட முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
நீதித்துறையில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தும் வருடமாக அடுத்த வருடம் அமையும். தேங்கிக் கிடக்கும் வழக்குகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
சிவில் வழங்குகளின் தாமதங்களை நிவர்த்திக்கும் வகையில் நீதிச் சேவை ஆணைக்குழுவின் உறுதுணையுடன் பல காத்திரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. என்றார்.
0 comments :
Post a Comment