பலஸ்தீன மக்கள் நியாயத்துவம் மற்றும் பிறர் உடமையாக்க முடியாத தமது உரிமைகள் என்பவற்றை அடைந்துகொள்வதற்காக பல தசாப்த காலமாக மேற்கொண்டுவரும் போராட்டத்தில் இலங்கை மக்களும் அவர்களுடன் இன்றைப் போலவே எதிர்காலத்திலும் கைகோர்த்து நிற்பார்கள் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பலஸ்தீன ஒருமைச் செய்திலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இறைமைமிக்க பலஸ்தீன அரசு ஒன்றினை உருவாக்கும் இறுதிக் குறிக்கோளுடன் சமாதானத்திற்கான சகல வழிகளையும் தேடிப்பார்த்தல் வேண்டும்.
அதனால் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள சமாதான செயற்பாடுகளை மீண்டும் முன்னெடுப்பதற்கு முயற்சித்தல் வேண்டும்.
இப்பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் பட்சத்தில் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்திற்கும் சமாதானம் கிட்டும்.
பலஸ்தீன மக்களின் அரசியல் ஐக்கியத்துவம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் என்பன ஐக்கிய நாடுகளின் முன்மொழிவின் மீது இரு நாடுகளை உருவாக்கிக் கொள்வதற்கான தீர்வினை வெற்றிகொள்ள காரணமாக அமைவதுடன் இலங்கை இதற்கு ஒத்துழைப்பு வழங்கும்.
கரடுமுரடான அரசியல் மற்றும் பொருளாதார பாதைக்கு மத்தியிலும் கூட தாபனங்களை கட்டியெழுப்புவதில் பலஸ்தீன அதிகாரசபை அடைந்துள்ள முன்னேற்றம் பற்றி நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.
No comments:
Post a Comment