இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் வாழ்க்கை திரைப்படமாகிறது
விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்படவுள்ளது. பாவ்னா தல்வர் இப்படத்தை இயக்க, ராஜீவ்காந்தியின் இளமைப் பருவ வாழ்க்கை, அரசியல் பிரவேசம், ஸ்ரீபெரும்புதூரில் குண்டு வெடிப்பில் இறந்தது போன்றவை படத்தில் இடம் பெறுகின்றன.
எனவே இப்படத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் ஒப்புதலை பெற முயற்சிகள் நடக்கிறது.திரைக்கதை முழு விவரமும் அவரிடம் அளிக்கப்பட உள்ளது. இந்த படத்தில் ராஜீவ்காந்தி வேடத்தில் நடிக்க அபிஷேக் பச்சனை தெரிவு செய்துள்ளனர்.
மேலும் சில ஹாலிவுட் நடிகர்களும் பரிசீலிக்கப்படுகிறார்கள்.ராஜீவ் வேடத்தில் நடிக்க தெரிவானவர்களின் பெயர் பட்டியலும் காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் ஒப்படைக்கப்படுகிறது.
ராஜீவ் காந்தியின் வேடத்தில் நடிப்பதற்கு அபிஷேக் பச்சனுக்கு கூடுதல் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
.
0 comments :
Post a Comment