நியூஸ்லாந்துடனான இரண்டாவது போட்டியில் இலங்கைக்கு வெற்றி
இலங்கைக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டக்வட் லூயிஸ் முறைப்படி வெற்றி பெற்றது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நியூசிலாந்து அணி ரி-20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.
இவ்விரு அணிகளுக்கும் இடையில் இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி பல்லேகலவில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துப்படுத்தாடிய நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் ஆறு விக்கெட்டுக்களை இழந்து 250 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 22.5 ஓவர்களில் மூன்று விக்கெட்டுக்களை இழந்து 118 ஓட்டங்களை பெற்றது. இதன்போது மழை குறுக்கிட்டதுஎனினும் டக்வட் லூயிஸ் முறைப்படி 14 ஓட்டங்களினால் இலங்கை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment