வெலிக்கடையில் இறுதியாக கொமாண்டே இராணுவ அணி களமிறங்கியது
கொமாண்டோ படைப்பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுமார் ஒரு மணித்தியால விசேட இராணுவ நடவடிக்கையின் மூலம் வெலிக்கடை சிறைச்சாலையின் கலவரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என சிரேஷ் பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கா தெரிவித்தார். இந்த இராணுவ முன்னெடுப்பில் ஈடுபட்ட இராணுவ விசேட கொமாண்டோ படைப்பிரிவைச் சேர்ந்த ஆறு வீரர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், மேற்படி கலவரத்தைத் தூண்டி அதற்கு தலைமை வகித்ததுடன் படையினருடன் நேருக்கு நேர் மோதிய 11 கைதிகள், இந்த இராணுவ நடவடிக்கையின் போது கொல்லப்பட்டனர். மேலம் 20பேர் காயங்களுக்கு உள்ளாகினர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்று இடம்பெற்ற கலவரம் தொடர்பில் ஊடகங்களுக்கு முழுமையான விளக்கத்தை அளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment