Tuesday, November 13, 2012

ஐ.தே.க என்றால் என்ன நீயும் என் நண்பன் தான்

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தனவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளார்.இவரைப் பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று திங்கட்கிழமை ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தனவை நேரில் பார்வையிட்ட ஜனாதிபதி, நலம் விசாரித்தார்.

மாரடைப்புக் காரணமாக கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் இவர் குணமடைந்து வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com