தேசியப் பிரச்சினை தீர்வுக்கு அனைத்து கட்சிகளும் எம்முடன் ஒன்று சேருங்கள்-ஜனாதிபதி அழைப்பு
இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஜ.தே.க, ரி.என்.ஏ ம.வி.மு உள்ளிட்ட சகல எதிர்கட்சிகளும் அரசாங்கத்துடன் கை கோர்க்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்றில் வரவு – செலவு திட்டத்தினை சமர்ப்பித்து உரையாற்றும்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உரையில் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், நாட்டின் அபிவிருத்திக்கு குழி வெட்டும் அதிகாரங்கள் இன்னமும் இருக்கின்றன என்பதை, திவிநெகும சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த போது ஏற்பட்ட அசாதாரண நிலைமையின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது.
இவ்வாறான மனித சுனாமிகளுக்கு முகங்கொடுக்கக்கூடிய திறன் அரசாங்கத்துக்கு உள்ளது. நாட்டிலிருந்து வறுமையை முற்றாக இல்லாதொழிப்பதே எனது அரசாங்கத்தின் முக்கிய குறிக்கோளாகும்
இலங்கை எதிர்கொண்டுள்ள தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் உட்பட அனைத்து எதிர்க்கட்சியினரும் அரசாங்கத்தோடு கைகோர்க்க வேண்டும்
இந்த நாட்டில் வாழ்ந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானத்தை எடுக்குமாறும் சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் இவ்வாறானதொரு தீர்மானத்துக்கு வந்தால் சாலச்சிறந்தது.
0 comments :
Post a Comment