இந்தியர்களின் கறுப்பு பணம் தொடர்பில் தகவல் வழங்கிய சுவிஸ் வங்கி ஊழியர்
சுவிஸ்நாட்டின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஒரு வங்கியில் பணியாற்றிய முன்னாள் ஊழியரான ரூடால்ப் எல்மர் கறுப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர்கள் தொடர்பாக பரபரப்பு தவகல்களை விக்கிலீஸ்ஸிற்கு வழங்கியதாக தகவல் வெளியிட்டுள்ளார்.இதன் படி சுவிஸ் நாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை குவித்து வைத்திருப்பவர்களில் 90 சதவீதம் பேர் அரசியல் வாதிகள்தான் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த அரசியல் வாதிகள் பல ஆயிரம் கோடி ரூபாய்களை பதுக்கி வைத்துள்ளனர். கிரிக்கெட் வீரர்கள், சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்திய விஐபிக்களும் சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணம் வைத்துள்ளனர்.
இந்த தகவல்களை நான் விக்கிலீக்சுக்கு கொடுத்துள்ளேன். ஆனால் கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் பற்றிய எந்த தகவல்களையும் நான் இந்திய அரசுக்கு விற்க வில்லை என டோல்ப் எல்மர் கூறினார்.
சுவிஸ் வங்கி அதிகாரியின் இந்த தகவல் அரசியல் வாதிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
0 comments :
Post a Comment