தனியார் முஸ்லீம் சட்டமூலம் திருத்தம் செய்யப்படும் அமைச்சர் ரவூக்ஹக்கீம்
இலங்கையில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்றபோதும் முஸ்லிம் தனியார் திருத்தச் சட்டமூலத்தை அமுல்படுத்துவதற்கான பூரண அனுமதியை அரசாங்கம் வழங்கியுள்ளது என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.எமது மூதாதையர்களினால் இந்த சட்டம் பல தசாப்தங்களுக்கு முன்னர் எமது நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது எமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதாமாகும்.
இந்த சட்டமூலத்தில் சில குறைபாடுகள் காணப்படுகின்றன. இதனை தற்காலத்திற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்க வேண்டிய தேவை உள்ளது.
எனவே இந்த சட்டத்தில் மேற்கொள்ள வேண்டி திருத்தங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது இச்சட்டமூலம் திருத்தம் செய்யப்பட்டு விரைவில் அமுல்படுத்தப்படும் என்றார்.
0 comments :
Post a Comment