தேசிய பொருளாதார அபிவிருத்திக்கு வடமாகாணம் பங்களிப்பு செய்கின்றதாம்!!
மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்க்கையை அபிவிருத்தி செய்வதன் ஊடாக பொருளாதார அபிவிருத்தியில் இம்மக்களிடமிருந்து பங்களிப்பை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போது வடக்கில் அனைத்து மாவட்டங்களிலும் மக்களின் வாழ்க்கை அபிவிருத்தி அடைந்து வருகின்றது. புதிய உற்பத்திகள் மக்களின் வாழ்க்கை, கல்வி , சுகாதாரம், உள்ளிட்ட புதிய அபிவிருத்திகள் அங்கு ஏற்பட்டுள்ளன. இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம் 7 வீதமாகும். இவ்வளர்ச்சி வேகத்தில் 20 வீதத்திற்கும் அதிகமான பங்களிப்பு வடமாகாணத்தின் மூலம் கிடைக்கின்றதென்பதை நான் நினைவுபடுத்த விரும்புகின்றேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment