Friday, November 23, 2012

பாராளுமன்ற தெரிவுக்கு குழுவின் முன் பிரதம நீதியரசர் ஆஜர் -முதற்கட்ட விசாரணை முடிந்தது

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீதான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முதல்கட்ட விசாரணை முடிவுக்கு வந்துள்ளதாக தெரியவருகின்றது. இந்த விசாரணைகள் இன்று காலை 10.40 பாராளுமன்றத்தின் முதலாம் இலக்க அறைக்குள் ஆரம்பமானது.இந்த விசாரணைக்காக பிரதம நீதியரசர் முதன்முறையாக பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கு முன்னால் ஆஜரானார். இதனைத் தொடர்ந்து முதற்கட்ட விசாரனைகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அடுத்தகட்ட விசாரணை டிசம்பர் 4ம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com