சப்புகஸ்கந்த மசகு எண்ணெய் சுத்தரிப்பு நிலையில் நாளை முதல் மீண்டும் இயங்கவுள்ளது
இறக்குமதி செய்யப்படும் திரவ எரிபொருள் சுத்திகரிப்பு பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ள சப்புகஸ்கந்த மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் நாளை தொடங்கப்படும் என்று அதன் முகாமையாளர் நீல் ஜயசேகர அறிவித்துள்ளார்.சில முக்கிய பராமரிப்பு பணிகளுக்காகவும் மசகு எண்ணெய் கையிருப்பு தீர்ந்தமை காரணமாகவும் கடந்த 26ஆம் திகதி முதல் 10 நாட்களுக்கு சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டிருந்தது.
இதன்போது எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக எதிர்கட்சிகள் தொடர்ச்சியாக பொய்யான தகவல்களை வெளியிட்டு வந்தன.
இந்நிலையில் தற்போது எண்ணெய் சுத்திரிகரிப்பு நிலையத்தின் பராமரிப்பு பணிகள் யாவும் நிறைவடைந்துள்ளதாகவும் முகாமையாளர் தெரிவித்ததுடன், நாளை சுத்திகரிப்பு பணிகள் வழமைபோல் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை டுபாயில் இருந்து 80 ஆயிரம் தொன் மசகு எண்ணெய் இன்று கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment